இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்: 2020 – 2025
காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சினால் 09.08.2020 ஆந் திகதிய 2187/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள குறித்த வேலைத்திட்டமானது சகல பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தில் ஈடுவடுவதற்கு ஆர்வமுள்ள 18 – 45 வயதுக்கு உட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர்கள் தங்களது கிராம சேவகரிடம் விண்ணப்பப்படிவங்களைப் பெற்று, பிரதிசெய்து, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் 29.10.2020 ஆந் திகதிக்கு முன்னர் கிராம சேவகரிடம் அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறித்த வேலைத்திட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்களைக் கடந்த 28.09.2020 ஆந் திகதிய தினமின மற்றும் தினகரன் ஆகிய பத்திரிகைகளினூடாக அறிந்துகொள்ளலாம்.
- பிரதேச செயலாளர்














