யானையின் தாக்கத்தினால் பாதிப்புற்ற மக்கள் பிரதேச செயலாளரிடம் மகஜரினைக் கையளித்தல்−2023
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப்பனங்காடு , கண்ணகி கிராமம்- 1 மற்றும் கண்ணகி கிராமம்-2 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் யானையின் அட்டகாசத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்றின் ஊடாக
தங்களது உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்புக் கோரி இன்று (2023.03.09) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு வி.பபாகரன் ஐயா அவர்களிடம் மகஜரினை சமர்ப்பித்தனர்.
மேலும், அக்கிராம மக்களின் அன்றாட வாழ்வாதார செயற்பாடுகள், உடமைகள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசத்தினால் மிகவும் பாதிக்கப்படுவதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் யானைகளின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்துள்ளதுடன், அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.














